
லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (29.08.2022) காலை 11.11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஜி.வி பிரகாஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
The First Look of #MarkAntony to be revealed at 11:11 am tomorrow!
@actorvishalofficial @iam_sjsuryah @vinodkumar_offcl @adhikravi @rituvarma #SunilVarma pic.twitter.com/5en99DHKvC
— G.V.Prakash Kumar (@gvprakash) August 28, 2022
