திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

9 நொடிகளில் தகர்கப்பட்ட நொய்டா இரட்டை கோபுர 40 மாடி கட்டிடம்!

வெறும் 9 நொடிகளில் தகர்கப்பட்ட 40 மாடி கட்டிடம்

இது வரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கட்டிட இடிப்பில் இதுதான் மிகப்பெரியது

3700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டதாக தகவல்

2004ம் ஆண்டில் இரட்டை கோபுரம் கட்டட பணி துவங்கியது. ‘சூப்பர்டெக்’ நிறுவனத்துக்கு 9 தளங்கள் கொண்ட 14 தளங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்ட திட்டத்தை திருத்தி, ஒவ்வொரு டவர்களிலும் 40 தளங்கள் வரை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கி நடைபெற்ற பிறகு தான் விதிமீறல் குற்றச்சாட்டு எழுந்தன.

கட்டடம் உயர உயர வரைபடத்துக்கும் கட்டுமானத்தின் வடிவத்துக்கும் வேறுபாடு இருந்தது. நொய்டா பகுதியின் தட்பவெப்பம், புவியில் அமைப்புக்கு எதிராக கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2012ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2014ல் இடிக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2021ல் ஆகஸ்ட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து, 3 மாதத்தில் கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது.

ரூ.20 கோடி செலவில் வெறும் 9 முதல் 12 வினாடிக்குள் இன்று மதியம் 2.30 மணிக்கு இரட்டை கோபுர கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

 

322 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன