புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

விக்ரம் “கோப்ரா” எப்படியிருக்கு… கோடங்கி விமர்சனம்

 

விக்ரம் “கோப்ரா” எப்படியிருக்கு… கோடங்கி விமர்சனம்

 

 செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க, விக்ரம்,  இஃர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கே எஸ் ரவிக்குமார்,சுரேஷ்மேனன், ரோபோ ஷங்கர், ஸ்ரீநிதி , மீனாட்சி , மிருணாளினி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் கோப்ரா.

 

ஹாலிவுட் படங்களில் தான் இதுபோன்ற ஓப்பனிங் சீன்ஸ் இருக்கும். அந்தளவுக்கு கோப்ராவின் ஆரம்பமே மிரட்டலாக தொடங்கி பார்வையாளர் கவனத்தை தன் பக்கமாக இழுத்துக் கொள்கிறது.

 

ஸ்காட்லாந்து நாட்டின் இளவரசர், இந்தியாவின் வட மாநில முதலமைச்சர் ஒருவர், ரஷ்யாவில் உள்ள ராணுவ தளபதி ஒருவர் என வரிசையாக மிக முக்கிய நபர்கள் திடீர்திடீரென  கொல்லப்படுகிறார்கள்.

இதற்கு என்ன காரணம், கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் கொல்லப்படுவது ஏன்? யார் இவர்களை கொல்வது என்பதை சொல்வதுதான் கோப்ரா.

 

ஒவ்வொரு கொலையும் கணிக்க முடியாதபடி கணக்குப் போட்டு நடத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்துகிறது,

 

கொலையாளியைப் பிடிக்க இன்டர்போல் போலீஸ் ஒரு பக்கம் தீவிரமாக தேட ஆரம்பிக்க, கொலையாளியைப்பற்றி ரகசியமாக சில தகவல்களை இன்டர்போல் அதிகாரிக்கு டிப்ஸ் வருகிறது. இதை யார் சொல்வது என்பதிலும் ஒரு டிவிஸ்ட்.  இப்படி சுவராஸ்யத்துக்கு குறையில்லாமல் ஜெட் வேகத்தில் நகர்ந்த திரைக்கதையின் வேகத்தை பலூனில் ஓட்டைவிழுந்து காற்று போவது போல பின்பாதி திரைக்கதையின் பல காட்சிகள் ஸ்பீடு பிரேக் போட்டு நகர மறுக்கிறது.

எடிட்டர் இன்னும் கொஞ்சம் கத்திரியை காட்சிகளில் வைத்திருந்தால் கோபராவின் வேகம் சீறியிருக்கும்.

 

ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவால் ஹாலிவுட் படங்களுக்கு போட்டிபோடும் விதமாக காட்சியமைப்புகள் மிரட்டுகிறது.

 

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. பாடல்கள் அனைத்தும் பட்த்துக்கு பலம் சேர்க்கிறது.

 

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பல புதுமைகள் புகுத்து விரம் பல கெட்டப்புகளில் வந்தாலும் ஏனோ மனசில் நிற்க மறுக்கிறது பல வேஷங்கள். ஆனாலும் மனுஷன் மெனக்கெட்டதற்காக பாராட்டலாம்.

 

அதோடு பேராசிரியையாகவும் வரும் ஸ்ரீநிதி ஷெட்டி, காதலியாக வரும் மிருணாளினி ரவி, மாணவியாக வரும் மீனாட்சி, வில்லனாக வரும் ரோஷன் மேத்யூ என ஒவ்வொருவரும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

.

இண்டர்போல் அதிகாரி வேடத்தில் வரும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிப்பும் ரசிக்கும் ரகம்.

 

மொத்தத்தில் கோப்ரா விக்ரம் மெனக்கெடுதலுக்காக கமர்சியலாக கையை கடிக்காது…

 

  • கோடங்கி
  • மதிப்பீடு 3/5

 

 

 

317 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன