வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

சண்டை காட்சி படப்பிடிப்பை நிறைவு செய்த வெற்றிமாறன் !

கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஆக்‌ஷன் சண்டை காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதில், ஒரு தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளை சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின் வடிமைத்துள்ளார். வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கான ஒருகட்ட படப்படிப்பு நிறைவு என்று குறிப்பிடப்பட்டு சில புகைப்படங்களையும் படக்குழு இணைத்துள்ளது.

298 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன