புதன்கிழமை, மே 15
Shadow

Tag: வெற்றிமாறன்

விடுதலை இரண்டாம் பாகத்திற்கு ரெடியான சூரி !

விடுதலை இரண்டாம் பாகத்திற்கு ரெடியான சூரி !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்திருந்தார். இந்நிலையில், 'விடுதலை -2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். ...
வைரலாகும் ‘விடுதலை’ பட பாடல்!

வைரலாகும் ‘விடுதலை’ பட பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' பாடல் நேற்று காலை 11 மணிக்கு வெளியாகி கவனம் பெற்றது. சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் பாடியுள்ள இந்த பாடல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து இரண்டு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் பாடியுள்ள இந்த பாடல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து இரண்டு மில்லிய...
விடுதலை திரைப்பட விபத்து குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியீடு!

விடுதலை திரைப்பட விபத்து குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3-ம் தேதி சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்ற சண்டை கலைஞர் உயிரிழந்தார். ரோப் கயிறு அறுந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். இவரின் இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்து குறித்து விடுதலை பட தயாரிப்பு நிறுவனம் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் அறிக்கை ஒன்றை...
வைரலாகும் வெற்றிமாறன் படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்!

வைரலாகும் வெற்றிமாறன் படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பேட்டைக்காளி. இவர் இதற்குமுன்பு தினேஷ் நடிப்பில் வெளியான அண்ணணுக்கு ஜே படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் கலையரசன், ஆண்டனி, கிஷோர், ஷீலா ராஜ்குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வருகிற 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டைக்காளி படத்தில் பாண்டியாக கலையரசனும், செல்வசேகரனாக வேல ராமமூர்த்தியும், தேன்மொழியாக ஷீலா ராஜ்குமாரும், முத்தையாவாக கிஷோரும் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
சண்டை காட்சி படப்பிடிப்பை நிறைவு செய்த வெற்றிமாறன் !

சண்டை காட்சி படப்பிடிப்பை நிறைவு செய்த வெற்றிமாறன் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆக்‌ஷன் சண்டை காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதில், ஒரு தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளை சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின் வடிமைத்துள்ளார். வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கான ஒருகட்ட படப்படிப்பு நிறைவு என்று குறிப்பிடப்பட்டு சில புகைப்படங்களையும் படக்குழு இணைத்துள்ளது....
வெற்றிமாறன் கைக்காட்டும் நபருக்கு படம் இயக்க வாய்ப்பு – அதிரடியாக அறி்வித்த தயாரிப்பாளர்!

வெற்றிமாறன் கைக்காட்டும் நபருக்கு படம் இயக்க வாய்ப்பு – அதிரடியாக அறி்வித்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
இயக்குனர் வெற்றிமாறன் “ நாம்” அறக்கட்டளையின் சார்பாகத்திரை பண்பாடு ஆய்வகத்தைத் தொடங்கி உள்ளார். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு நுழைவு தேர்வு வைத்து அவர்களின் வீடுகளுக்கு நேரடி யாகச் சென்று, உண்மையிலேயே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் விளிம்பு நிலை மனிதர்களாக, முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா? தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா? என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ, மாணவிகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளைக் கட்டண மில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத்துறையில் மிகச்சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார். இந்நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியின் போது கலைப்புலி எஸ்...
“நீண்ட காலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குனர் கனவை வாடிவாசல் திறந்துவிட்டுள்ளது”-கருணாஸ்!

“நீண்ட காலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குனர் கனவை வாடிவாசல் திறந்துவிட்டுள்ளது”-கருணாஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லொடுக்கு பாண்டி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை நடிகராக அறியப்பட்டவர் கருணாஸ். அதன்பின் வில்லன், காதல் அழிவதில்லை, திருடா திருடி, பிதாமகன் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். பிறகு கதாநாயகனாகவும் பாடகராகவும் தீவிரமாக அரசியல்வாதியாகவும் பயணித்து வந்தார். இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கி சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் 'வாடிவாசல்' படத்தில் கருணாஸ் உதவி இயக்குனராக பணியாற்றவுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் கருணாஸ், "கிராமிய கானா பாடகராக கலை வாழ்வை தொடங்கிய எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது திரைத்துறைத்தான். தாய்மடியான தமிழ் சினிமாவில் முழுநேரமும் பயணிக்க முடிவெடுத்து உள்ளேன். ஆற்றல்மிகு இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறேன். என்னை இணைத்துக்கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி. கடைசிவரை கற்றுக்கொள்வது தான...
சாதி அடையாளங்களை முன்னிறுத்தி படம் எடுக்கிறார்கள் – இயக்குனர் அமீர் காட்டம்!

சாதி அடையாளங்களை முன்னிறுத்தி படம் எடுக்கிறார்கள் – இயக்குனர் அமீர் காட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். சமீபத்தில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத அமீர் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு 'இறைவன் மிக பெரியவன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் அமீர் பேசியாதவது, இந்த காலத்தி...
அமீர் – வெற்றிமாறன் கூட்டணியின் டைட்டில் போஸ்டர் ரிலிஸ்!

அமீர் – வெற்றிமாறன் கூட்டணியின் டைட்டில் போஸ்டர் ரிலிஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். சமீபத்தில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத அமீர் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு 'இறைவன் மிக பெரியவன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் போஸ்டரை வெளியிட்ட படக்குழு இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமை...
அமீருடன் இணைந்த வெற்றிமாறன்!

அமீருடன் இணைந்த வெற்றிமாறன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் நடிகராகவும் பயணித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் நடித்து பல பாராட்டுக்களையும் பெற்றார். இந்நிலையில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இது குறித்து அமீர் வெளியிட்ட தகவலில், "எனது அடுத்த பயணம் தொடங்குகிறது. திரைப்படமென்பது ஒருவரின் தனிப்பட்ட பார்வைதான். அது அழகாக மாறுவதென்பது, இன்னொருவருடன் கைக்கோர்க்கும் போதுதான். அது இன்று (02.02.2022) நடைபெறுகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் படம் குறித்த அறிவிப்புகள் வெளிய...