சென்னையில் நடந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, பாஸ்கரன் ஆகிய 5 பேர் பங்கேற்கவில்லை.

ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்காதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்தன.

இந்தநிலையில் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து கட்சி தலைமைக்கு அமைச்சர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.

அந்த விளக்கத்தில், ‘சொந்த ஊர்களில் இருந்தபோது, திடீரென ஆலோசனை கூட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ‘திடீர்’ அழைப்பால் உடனடியாக புறப்பட்டு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை’, என்று குறிப்பிட்டிருந்ததாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

452 Views
