புதன்கிழமை, ஆகஸ்ட் 19
Shadow

இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இதில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘இந்தியன் 2’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 3-வது வாரத்தில் நடைபெறும் என்று சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது என்று கமல் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனுடன் சில புகைப்படங்களையும் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

350 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன