ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

‘திகட்ட திகட்ட காதலிப்போம்’.. வெளியானது அர்ஜுன் தாஸ் பட பாடல்..!

தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வசந்த பாலன்.

இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ஜெயில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது அநீதி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இதையடுத்து அநீதி படத்தில் இடம்பெற்றுள்ள திகட்ட திகட்ட காதலிப்போம் என்ற பாடலை இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகின.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன