வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

தி.மு.க. மகளிர் அணியில் பணியாற்றுவதையே விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி.

2-ஜி வழக்கில் விடுதலையான தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சென்னை பெரியார் திடலில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது அவருக்கு கி.வீரமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ‘தந்தை பெரியார்’ புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘என்னுடைய கொள்கைகளுக்கும், எனக்கும் உறுதுணையாக, உறுதியாக நான் என்னுடைய பாசறையாக நினைக்கக் கூடிய பெரி யார் திடலுக்கு வந்து, கி.வீர மணியை சந்தித்து வாழ்த்து பெற்றது எனக்கு பெருமையான ஒன்று ஆகும்.’ என்றார்.
இதையடுத்து அவரிடம், தி.மு.க.வில் உங்களுக்கு வேறு பதவிகள் கொடுப்பார்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கனிமொழி எம்.பி. ‘எனக்கு கொடுத்து இருக்கிற பத வியே மகிழ்ச்சியான பதவி. தொடர்ந்து மகளிர் அணியில் பணியாற்றுவதையே நான் விரும்புகிறேன்.’ என்று பதிலளித்தார்.
கி.வீரமணி நிருபர்களிடம் கூறும்போது, ‘எங்களை பொறுத்தவரையில் கனிமொழி செல்லப்பிள்ளை. அவர் கொள்கை ரீதியாக முழுக்க, முழுக்க ஒரு தலைசிறந்த பகுத்தறிவுவாதியாக குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்க்கப்பட்டவர். இன்னமும் அந்த கொள்கையில் கொஞ்சம் கூட வளையாதவர். அண்ணா- கருணாநிதி வழியில், தி.மு.க.வை வழி நடத்தி செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு, கனிமொழி எம்.பி. உறுதுணையாக இருப்பார்’ என்றார்.
260 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன