சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

உலகம் முழுவதும் போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது: போப் ஆண்டவர் பிரான்சிஸ்

வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகம் முழுவதும் இன்று போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் பதற்றம் நிலவி வருகிறது. அதில் பாதிக்கப்படும் சிறு குழந்தைகளின் முகத்தில் தெரியும் வேதனை மிகவும் பாதிக்கிறது. எனவே, போர் பதற்றத்தை தணிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதியை ஏற்படுத்த வேண்டும். அது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே சாத்தியமாகும். கொரிய தீபகற்பத்தில் நிலவும் முரண்பாடுகளை களைய வேண்டும். அப்போது தான் பரஸ்பரம் நம்பிக்கை மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், சிரியா, ஏமனில் நடக்கும் உள்நாட்டு போர் குறித்து கவலை தெரிவித்த போப், ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரம் குறித்தும் பேசினார்.

சமீபத்திய வங்காளதேசம், மியான்மருக்கு வந்த பயணத்தை நினைவுகூர்ந்த போப், சர்வதேச சமூகம் தனது பிராந்தியத்தில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 
246 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன