வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நளினி உட்பட ஆறு பேர் விடுதலை – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

*ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நளினி உட்பட ஆறு பேர் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு*

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் நளினி பரோலில் இருந்து வருகிறார்.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு நளினி உட்பட ஆறு பேருக்கும் பொருந்தும் என தீர்ப்பளித்து
உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
பி.ஆர்.கவாய்,
நாகரத்தினம்,
ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி தீர்ப்பு.

மேலும் இவர்கள் மீது வேறு வழக்கு இல்லை என்றால் உடனடியாக விடுதலை செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் பரிந்துரை ஏற்று அவர் விடுதலை செய்ய ஆளுநர் ரவி முடிவெடுக்காத நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார்
உள்ளிட்ட ஆறு பேரும் விடுதலை.

அரசு சட்டத்தின் 161 வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.

தமிழ்நாடு அரசின் பரிந்துரைத்த போது ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்து தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தார்.

தமிழக ஆளுநர் ரவி முடிவெடுப்பதை தாமதப்படுத்திய தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30ஆண்டுக்கு மேலாக இவர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதில் தங்களுக்கு எந்தவித ஆட்சபனை இல்லை என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

254 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன