ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

தளபதி 67-இல் கமலா? ரசிகர்கள் உற்சாகம்!

அடுத்தடுத்து படங்கள் குறித்த அப்டேட் கொடுத்து வரும் ஒரே தமிழ் நடிகராக விஜய் மட்டுமே.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான “தளபதி 67” படத்திற்கான ஒரு புதிய அப்டேட் வெளியாகி, ரசிகர்களை உற்சாகக் கடலில் நீச்சலடிக்க வைத்துள்ளது.

சமீபத்தில் வெளியாகி இந்தாண்டின் மிகப்பெரும் தமிழ் படமாக பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனை உலகளவில் அள்ளிய படம் தான் விக்ரம்.

கமலஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில், யாரும் எதிர்பாராத விதத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு பக்கா மாஸ் ஆக்‌ஷன் படமாக உருவாகிய விக்ரம் படம், உலகளவில் பெரும் மக்கள் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த படம் விஜய்யுடன் “தளபதி 67” தான் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தளபதி 67 குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என பேசியது தான் அந்த வீடியோ.

இது தற்போது இணையத்தில் வைரலாகி வர, தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை உருவாக்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தன் அடுத்த படத்தில், அதாவது தளபதி 67-ல் உலக நாயகன் கமலஹாசன் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக அதகவல்கள் கூறுகின்றன.  புதிய அப்டேட் ரசிகர்களை உற்சாகக் கடலில் நீச்சலடிக்க வைத்துள்ளது.

349 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன