செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

பிரைம் வீடியோவின் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” வலைதளத் தொடர் முன்னோட்டம் வெளியீடு!

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’.

இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார்.

இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வெளியாகவிருக்கும் அசல் தொடரான ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘அமேசான் ப்ரைம் வீடியோவின் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியாகி.

வெகு பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வருகிறது. இந்த தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல், 30க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளுடன், 240 பிராந்தியங்களிலும் வெளியாகிறது.

68 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன