ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

திருப்பூரில் பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் பாதிப்பு- தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் !

திருப்பூா் மாநகரில் அண்மையில் பெய்த பருவமழையால் பரவலாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் வசித்து வரும் தொழிலாளியின் 9 வயது மகள் நெசவாளர் காலனியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக மாணவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துவந்த போதிலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதைத்தொடா்ந்து, மாணவிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

ஆனால் மாணவியின் பெற்றோர் சொந்த ஊரான மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனர்.

இதுகுறித்து மாணவியின் தந்தை கூறுகையில், திருப்பூர் நெசவாளர் காலனி பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் 2, 3 கழிப்பறைகள் மட்டுமே உள்ளது. இந்தக் கழிப்பறைகளும் சுத்தமாக பராமரிக்கப்படாததால் மாணவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது.

ஆகவே, மாநகராட்சி நிர்வாகம் நோய் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தெருக்கள் தோறும் புகை மருந்து அடிப்பது, வீடுகள் தோறும் சென்று கொசுப்புழுக்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

83 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன