திங்கட்கிழமை, மே 13
Shadow

Tag: டெங்கு காய்ச்சல்

திருப்பூரில் பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் பாதிப்பு- தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் !

திருப்பூரில் பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் பாதிப்பு- தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் !

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பூா் மாநகரில் அண்மையில் பெய்த பருவமழையால் பரவலாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் வசித்து வரும் தொழிலாளியின் 9 வயது மகள் நெசவாளர் காலனியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துவந்த போதிலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதைத்தொடா்ந்து, மாணவிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் மாணவியின் பெற்றோர் சொந்த ஊரான மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனர். இதுகுறித்து மாணவியின் தந்தை கூறுகையில், திருப்பூர் நெசவாளர் காலனி பள்ளியில் ...