
107 வயது மூதாட்டிக்கு ராகுலின் பிறந்த நாள் பரிசு
தன்னை சந்திக்க விரும்பிய, பெங்களூருவை சேர்ந்த 107 வயது மூதாட்டி ஒருவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.பெங்களூருவை சேர்ந்த திபாலி சிகந்த் என்பவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது: இன்று எனது பாட்டிக்கு 107 வது பிறந்த நாள். காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்திக்க வேண்டும் என்பது அவரது ஆசை. இதற்கு என்ன காரணம் என நான் கேட்டேன். அதற்கு அவர், ராகுல் அழகாக உள்ளார் என பதிலளித்தார். எனக்கூறினார். மேலும், தனது பாட்டி கேக் வெட்டு பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.இதனை பார்த்த ராகுல், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: அன்பான திபாலி அவர்களே, எனது பிறந்த நாள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை உங்களது அழகான பாட்டியிடம் கூறுங்கள். என் சார்பாக, அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவியுங்கள். வாழ்த்துகள், ராகுல். இவ்வாறு அவர் கூறியுள்ளார். திபாலி மற்றொரு டுவீட்டில், ராகுல் தனிப்பட்ட முறையில் எனது பாட்டியை போனில்அழைத்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
