சனிக்கிழமை, மே 23
Shadow

தமிழக அரசியலில் அடுத்து என்ன…? ஆருடம் சொல்கிறார் பிரபல இயக்குனர்..!

அரசியலில் அடுத்தது என்ன? ..
ஒரு சாமான்யனின் உண்மையான உள்ள குமுறல்…

கூவத்தூர்ல தங்கின கோஷ்டி பத்து பத்தா தினகரன் பக்கம் சாயும் .. எடப்பாடி கூடாரம் மெதுவா காலியாக ஆரம்பிக்கும் ..

பன்னீர் கூட்டினாலும் கழிச்சாலும் அந்த பன்னிரண்டோட நிப்பார் .. எடப்பாடிக்கு அப்படி இப்படி சுமார் ஒரு எட்டு தேறிடும் ..

அந்த 12ம் 8ம் சேருமா சேராதான்னு ஆண்டவனால கூட சொல்ல முடியாது .. 12 + 8 = 20 .. அப்ப 133 – 20= 113 (எடப்பாடிக்கும் பன்னீருக்கும் சேர்ந்ததை கழிச்சா) Disqualify பண்ணினது எவ்வளவுப்பா? Calculatorகள் கதை பேசும் ..

ஆக, தினகரனும் மெஜாரிட்டிக்கு திண்டாடுவார் .. கவர்னர் எட்டிப்பார்ப்பார் .. BJP க்கு இருக்கற கெட்ட பேரு இன்னும் 100 மடங்கு கூடும் .. .

ஸ்டாலின் நாக்குல முதன் மந்திரி ஜலம் ஊரும் .. கனிமொழி கலைஞர் பக்கத்துல நின்னு ஏதாவது நல்ல சேதி கலைஞர் மூலமா ஸ்டாலின் வாயால அவளுக்கு எதிர்பார்ப்பா ..

வைகோ காரும் திருமா காரும் அங்க இங்க குறுககே நெடுக்கே பறக்கும் .. விஜயகாந்த் சிங்கப்பூர் போவார் .. சசிகலாவுக்கு ஷாப்பிங்க்கு சைனா போக வாய்ப்பு இருக்கு …

ரஜனி பேசுவார் பேசுவார்ன்னு எதிர்பார்ப்போம் பேசமாட்டார் .. கமல் நிறுத்துவார் நிறுத்துவார்ன்னு எதிர்பார்ப்போம் நிறுத்த மாட்டார் ..

அழகிரி திடீர்னு flight பிடிச்சு டெல்லி போவார் .. கமயூனிஸ்ட்காரங்க ஒரு கோஷ்டி உடுமலைபேட்டைல மீட்டிங் போடும் .. இன்னொரு கோஷ்டி அறந்தாங்கில மீட்டிங் போடும் .. எதுக்குன்னு அவங்களுக்கே தெரியாது ..

அத்தனை பிரச்னைகளுக்கும் ஆரியர்கள் அதாவது பார்ப்பனர்கள்தான் காரணம்னு கருப்பு சட்டைக்காரங்க மத்தில பெரியார் திடல்ல வீரமணி கதறுவார்.. ..

காங்கிரஸ்காரன் நம்ம பங்குக்கு என்ன செய்யலாம்னு பேசுவாங்க கோஷ்டி சண்டை வந்துடும் .. முகுல் வாஸ்னிக் ன்னு ஒருத்தர் வருவார் சமாதானம் பண்ண .. அவர் புது கோஷ்டியை உருவாக்குவார் ..

ஒரு இடத்திலேயும் ஒரு முன்னேற்றமும் எங்கும் இருக்காது ..

மக்கள் எல்லோருக்கும் ஜென்ம சனி + அஷ்டம சனி + மங்கு சனி + ஏழரை சனி .. அதனால திண்டாடி தெருவில அலைவாங்க ..

ஆக இது ஊடகக்காரங்களுக்கு மட்டும் விபரீத ராஜ யோக காலம்.

இதை கணித்தவர் மூத்த இயக்குனர் நடிகர் விசு.

 

 

425 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன