
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார்.
கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்ட இவரின் படத்திற்கு எப்போதுதுமே மவுசு அதிகம். அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள துணிவு படத்திற்கும் அதே நிலை தான் நீடிக்கிறது.
அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் துணிவு.
இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியார், ஜான் கொக்கேன், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
ஜிப்ரான் இசையில், ’சில்லா சில்லா’ பாடலும் ‘காசேதான் கடவுளடா’ பாடலும் ‘கேங்க்ஸ்டா’ பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இதற்காக பல திரையரங்கில் ட்ரைலர் வெளியிடப்பட்டத்தைத் தொடர்ந்து அதனை கொண்டாடும் வகையில் பேனர் வைத்து, கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அந்த வகையில் படத்தின் ட்ரைலர் கடந்த வருடத்தின் கடைசி நாளில்மாஸாக வெளியானது.
1.51 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ட்ரைலர் வெளியான அரை மணிநேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி பெரும் சாதனை படைத்து வருகிறது.
வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் அஜீத் கொள்ளையரா? போலீசா? என்பதும் சஸ்பென்சாக வைக்கபபட்டுள்:ளது. “இந்த அயேக்கிய பய மேல கைய வைக்கலாமா?” என கேட்கும் அஜீத்வசனம் தெறிக்க வைக்கிறது.
ஸ்பீடான மாஸான காட்சிகளுடன் டிரைலர் அதகலப்படுத்துகிறது. டிரைலர் வெற்றியை அஜீத் ரசிகர்கள கொண்டாடி வருகிறார்கள்.
