ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 13
Shadow

Tag: Thunivu

‘துணிவு’ படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம்!

‘துணிவு’ படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்திருந்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் 'துணிவு' திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டினர். 'துணிவு' திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 'துணிவு' திரைப்படத்தில் 50-வது நாள் கொண்...
வென்றது விஜயின் வாரிசா?அஜித்தின் துணிவா?..

வென்றது விஜயின் வாரிசா?அஜித்தின் துணிவா?..

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
9 ஆண்டுகளுக்கு பின் விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது. கடந்த 11ம் தேதி வெளிவந்த இந்த இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் யாருடைய திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளது என்று கடும் போட்டி நிலவி வருகிறது. உலகளவில் துணிவு படத்தை விட வாரிசு படம் அதிக வசூல் செய்து கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் துணிவு படம் தான் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்த 9 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இதுவரை தமிழகத்தில் மட்டுமே துணிவு திரைப்படம் ரூ. 98 கோடியும், வாரிசு திரைப்படம் ரூ. 97 கோடியும் வசூல் செய்துள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது தமிழகத்தில் துணிவு திரைப்படத்தின் வசூல் முதலிடத்தை அப்படியே தக்க வைத்துள்ளது என தெரிகிறது....
‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்!

‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார். இதன் பிறகு அவர் பேசுகையில், '' முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்...
துணிவு – வாரிசு கூடுதல் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி!

துணிவு – வாரிசு கூடுதல் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக நேற்று திரையரங்குகளில் வெளியானது. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவும் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிப்பதற்கும் தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது திரையரங்க அதிபர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12, 13 மற்றும் 18-ம் தேதிகளில் வாரிசு மற்றும் து...
வாரிசு – துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து.. ரசிகர்கள் ஏமாற்றம்!

வாரிசு – துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து.. ரசிகர்கள் ஏமாற்றம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர். இப்படங்களின் டிக்கெட் முன்பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்பட சிறப்புக் காட்சி நாளை அதிகாலை 1 மணிக்கும் வாரிசு திரைப்பட சிறப்புக் காட்சி நாளை அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், தற்போது இ...
அஜித் நடித்த “துணிவு” படத்திற்காக புதுச்சேரி நடுக்கடலில் போஸ்டர் வைத்த ரசிகர்கள்!

அஜித் நடித்த “துணிவு” படத்திற்காக புதுச்சேரி நடுக்கடலில் போஸ்டர் வைத்த ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  #அஜித் நடித்த #துணிவு படத்திற்காக புதுச்சேரி நடுக்கடலில் போஸ்டர் வைத்த அஜித் ரசிகர்கள்.   https://twitter.com/onlykodanki/status/1612304321147998211?s=20&t=GKMwdrtQTZx2ua72mLDFkw    
புதிய சாதனை படைத்த துணிவு டிரைலர்!

புதிய சாதனை படைத்த துணிவு டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார். கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்ட இவரின் படத்திற்கு எப்போதுதுமே மவுசு அதிகம். அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள துணிவு படத்திற்கும் அதே நிலை தான் நீடிக்கிறது. அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் துணிவு. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியார், ஜான் கொக்கேன், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் ஜிப்ரான் இசையில், ’சில்லா சில்லா’ பாடலும் ‘காசேதான் கடவுளடா’ பாடலும்  ‘கேங்க்ஸ்டா’ பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இதற்காக பல  திரையரங்க...
“என்ன மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? – யாரை மிரட்டுகிறார் அஜீத்

“என்ன மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? – யாரை மிரட்டுகிறார் அஜீத்

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
"என்ன மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா?"- யாரை மிரட்டுகிறார் அஜீத்   https://youtu.be/FuJ4biORMLw
’சில்லா சில்லா’ பாடல் படைத்த புதிய சாதனை!

’சில்லா சில்லா’ பாடல் படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், நேற்று முன்தினம் 'துணிவு' படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் 'சில்லா சில்லா' பாடல் வெளியான 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்....
நம்ம நண்பர் படம்தானே – ‘துணிவு’ குறித்து விஜய் சொன்ன பதில்!

நம்ம நண்பர் படம்தானே – ‘துணிவு’ குறித்து விஜய் சொன்ன பதில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது. மேலும், இப்படங்களின் தொடர் அப்டேட்கள் இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், 'வாரிசு' படத்தில் நடித்துள்ள நடிகர் ஷியாம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில், "துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்று விஜய்யிடம் சொன்ன போது வரட்டும் பா. நம்ம நண்பர் படம்தானே.. அதுவும் நல்லா போகட்டும்.. நம்ம படமும் நல்லா போகட்டும்" என்று விஜய் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் இந்த கருத்தால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்....