வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

முதலில் குடும்பம்தான் உங்களோடு நிறைய பேச வேண்டியுள்ளது காத்திருங்கள் -2ம் நாள் சந்திப்பில் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில்  காஞ்சீபுரம், திருவள்ளூர், கிருஷ்ண கிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை நேற்று சந்தித்தார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அடையாள அட்டையுடன் வந்த ரசிகர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று 2-வது நாளாக  ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த், அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக, பேசிய ரஜினிகாந்த், ”இரண்டாவது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய். தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான். ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலில் குடும்பம் தான் முக்கியம், நிறைய பேச வேண்டியுள்ளது. ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்” என்றார்
893 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன