சனிக்கிழமை, மே 23
Shadow

ஆண்மையில்லாதவர்கள் என்றதற்கு பதிலடி குருமூர்த்தியை புறம்போக்கு என்கிறாரா அமைச்சர் ஜெயக்குமார்..?

ஆண்மையில்லாதவர்கள் என்றதற்கு பதிலடி குருமூர்த்தியை புறம்போக்கு என்கிறாரா அமைச்சர் ஜெயக்குமார்..?

குருமூர்த்தி ட்வீட்டும் அதற்கு ஜெயக்குமார் பதிலடியும் தொடர்கதையாகி வருகிறது. இம்பொடன்ட் என்ற வார்த்தைக்கு குருமூர்த்தி விளக்கம் சொல்ல, அதற்கு பதிலடியாக புறம்போக்கு என்பதற்கு விளக்கம் சொல்லியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், புறம்போக்கு என்றால் ஆங்கில அகராதியில், Land exempt from assessment, either becauseit is set aside for communal purposes or because it is uncultivable என்று போட்டுள்ளது.

தமிழில் சமுதாய நன்மை சாகுபடிக்குத் தகுதியின்மை முதலிய காரணங்களினால் குடிகள் வசம் விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம் என்று போட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான, கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள், சாலை, மேய்ச்சல் தரிசு, இடுகாடு, போன்ற பொதுப் பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகள் புறம்போக்கு எனக் குறிக்கப்படுகின்றன. உங்களை யாரையாவது புறம்போக்கு என்று திட்டி விட்டு இப்படி விளக்கம் சொன்னால் சும்மா விடுவீர்களா? அப்படி இருக்கிறது குருமூர்த்தி தனது ட்விட்டருக்கு அளித்துள்ள விளக்கம் என்று சொல்லியுள்ளார்.

 

875 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன