சனிக்கிழமை, டிசம்பர் 9
Shadow

படமெடுக்காதே வேண்டாத வேலைன்னு சொல்லியும் கேக்காம இராவண கோட்டம் எடுத்திருக்கான் – துபாய் விழாவில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை

 

படமெடுக்காதே வேண்டாத வேலைன்னு சொல்லியும் கேக்காம இராவண கோட்டம் எடுத்திருக்கான் – துபாய் விழாவில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை

தமிழகத்தை சேர்ந்த திட்டக்குடி கண்ணன் ரவி துபாயில் பிரபல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

முதல் முறையாக சாந்தனுவை வைத்து இராவண கோட்டம் என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.
இதை விக்ரம் சுகுமார் இயக்கி இருக்கிறார்.

கயல் ஆனந்தி, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்

இந்த படத்தின் ஆடியோ வெளியீடு துபாயில் நடை பெற்றது.

விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசும் போது, “லைகா சுபாஷ்கரன் ஒருமுறை என்னிடம் பேசும் போது பொன்னியின் செல்வன் படம் எடுக்கப்போவதாக சொன்னார். அப்போது அவரிடம் எதுக்கு இந்த வேண்டாத வேலை என படமெடுக்க வேண்டாம் என சொன்னேன்.
என் பேச்சைக் கேட்காமல் பொன்னியின் செல்வன் படம் எடுத்தார் பெரிய வெற்றி பெற்றது.

எனக்கு அரசியல் தெரியும். சினிமா தெரியாது.

அதே போல தான் கண்ணன் ரவியும் ஒரு நாள் படமெடுக்க போவதாக சொன்னார்.
எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை, துபாய்க்கு வந்தமா நாலு காசு சாம்பாதிச்சமான்னு இல்லாம சினிமா எடுக்க போகாதே… அது சீட்டாட்டம் மாதிரி விட்டத பிடிக்கிறோம்னு போய்கிட்டே இருக்கும் அதனால வேண்டாம்னு சொல்லியும் கேக்காம படமெடுத்திருக்கான்

என் பேச்சை கேக்காம் படமெடுத்து ஜெயிச்ச பொன்னியின் செல்வன் போல இந்த இராவண கோட்டம் படமும் வெற்றி பெறும்” என வாழ்த்தினார்.

துரைமுருகனின் இந்த நகைச்சுவை பேச்சால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

274 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன