வியாழக்கிழமை, ஜூன் 1
Shadow

நன்றிக் கடனுக்காக எடுக்கப்பட்ட இராவண கோட்டம்!

 

விக்ரம் சுகுமார் இயக்கத்தில் சாந்தனு -கயல் ஆனந்தி ஜோடி நடிப்பில் திட்டக்குடி கண்ணன் ரவி தயாரிப்பில் உருவான படம் இராவண கோட்டம்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீடு துபாயில் நடை பெற்றது.

அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார்

இதில் பிரபல தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன், ஜான் பிரிட்டோ, ஐசரி கணேஷ், சுரேஷ்காமாட்சி, , இயக்குனர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், பார்தீபன், வெங்கட் பிரபு, யுவன்ஷங்கர்ராஜா, பிரேம்ஜி, சிவா, ஆதவ் கண்ணதாசன், ராதிகா, மீனா, குஷ்பு, சுந்தர்சி, பிரசன்னா, ஜி.பி.முத்து, த்யாரிப்பாளர் சிவா, நடிகர் சுப்பு பஞ்சு உட்பட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த் நடித்த எந்திரன்2 படத்திற்கு பிறகு இத்தனை நட்ச்சத்திர பட்டாளத்தோடு துபாயில் நடைபெற்ற முதல் ஆடியோ நிகழ்ச்சி இது.

விழாவில் பேசிய பலரும் சாந்தனுவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என வாழ்த்தினார்கள்.

திட்டமிட்ட பட்ஜெட்டை தாண்டி மெகா பட்ஜெட் செலவழிந்தாலும் ஒரு நல்ல திரைப்படத்தை கொடுக்க இருக்கிறோம். படத்தின் வெற்றி தோல்வியை விட அனைவரின் உழைப்புக்கு அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும். ஒரு நன்றிக் கடனை திருப்பி செலுத்த இந்த படத்தை எடுத்தேன் என்றார் தயாரிப்பாளர் கண்ணன் ரவி.

தமிழகத்தில் வறண்ட பூமியான இராமநாதபுரம் மாவட்ட உண்மை நிகழ்வை தொட்டு இந்த கதை உருவாக்கப்பட்டதாக இயக்குனர் விக்ரம் சுகுமார் கூறினார்.

219 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன