வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

“இராவண கோட்டம்” பட தயாரிப்பாளர் திட்டக்குடி கண்ணன் ரவி 2 ஆயிரம் பெண்களுக்கு இலவச புடவை வழங்கினார்!

 

திட்டக்குடி திருத்தேர் விழாவில் 2 ஆயிரம் பெண்களுக்கு இலவச புடவை! துபாய் தொழில் அதிபரின் நன்கொடை

திட்டக்குடியைச் சேர்ந்த கண்ணன் ரவி. பிரபல தொழில் அதிபரான இவர் துபாயில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் திட்டக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் ஆன்மீக நிகழ்வுகளுக்கு பெரும் பொருள் உதவியும், அன்னதானமும் வழங்குவது வழக்கம்.

 

இந்த ஆண்டும் திட்டக்குடி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தேர் நிகழ்வில் கலந்து கொள்ளும் பெண்கள் 2 ஆயிரம் பேர்களுக்கு இலவச புடவையும், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கி இருக்கிறார்.

பல ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார் திட்டக்குடி கண்ணன் ரவி.

 

இவர் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மகன் சாந்தனு – கயல் ஆனந்தி ஜோடி நடித்துள்ள இராவண கோட்டம் படத்தையும் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார் என்பதும், இந்த படத்தின் ரிலீஸ் மே மாதம் திட்டமிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

404 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன