வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

சுதந்திர வரலாற்று வலியை பதிவு செய்கிறதா 1947 ஆகஸ்ட் 16 படம்? கோடங்கி பார்வை 3.5/5

சுதந்திர வரலாற்று வலியை பதிவு செய்கிறதா 1947 ஆகஸ்ட் 16 படம்? கோடங்கி பார்வை 3.5/5

இயக்குனர் முருகதாஸ் தயாரிக்க அவரது உதவியாளர் பொன்குமார் இயக்கத்தில் உருவான 1947 ஆகஸ்ட் 16 திரைப்படம் விடுதலை கிடைக்காமல் வெள்ளையர்களிடம் அடிமை பட்ட மக்கள் வலியை மிக யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது.

கதைப்படி சுதந்திரத்திற்கு காத்திருக்கும் செங்காடு கிராமத்தில் பருத்தி உற்பத்தி தான் பிரதான தொழில்.
வெள்ளைக்கார அப்பாவும், பெண் பித்தனான மகனும் அந்த செங்காடு கிராம மக்களை மிக கொடுமை படுத்தி வருகிறார்கள்.
கவுதம் கார்த்தியின் அம்மாவை கிராம மக்கள் காட்டிக் கொடுத்ததால் அவர் செத்துப் போகிறார். அதனால் அந்த கிராமத்து மக்கள் மீது கவுதமுக்கு வெறுப்பு.
அதே நேரம் அந்த ஊரின் ஜமீன் தன் மகளை அந்த பெண் பித்தனான வெள்ளைக்காரன் மகனிடமிருந்து காப்பாற்ற சிறுவயதில் அவள் இறந்து விட்டதாக நாடகம் ஆடி வீட்டுக்குள்ளேயே வளர்த்து வருகிறார்.

இதற்கிடையில் இந்த பெண்ணுக்கும் கவுதமுக்கும் ஒரு நட்பு… இது காதல் ஆனதா?

பெண் பித்தனான அந்த வெள்ளைக்கார அதிகாரியின் மகனிடம் ஜமீன் பெண் சிக்கினாரா?

சுதந்திரம் கிடைத்த பிறகும் அதை தெரிந்து கொள்ளாமல் அடிமையாகவே பயந்து இருந்த செங்காடு மக்களுக்கு சுதந்திரம் கிடைத்ததா இல்லையா?

இப்படி பல்வேறு விஷயங்களுக்கு பதில் சொல்கிறது இயக்குனர் பொன்குமாரின் 1947 ஆகஸ்ட் 16.

கவுதம் கார்த்திக் மிகவும் யதார்த்தமாக பல இடங்களில் ரசிக்க வைக்கிறார்.

ஹீரோயின் அழகு… தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்…

கலை இயக்குனரின் பங்கு பாராட்டுதலுக்கு உரியது.

ஒளிப்பதிவும் மிக யதார்த்தம்… பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறார்.

புகழ் கதாபாத்திரம் மனசில் நிற்கும்.

கவுதம் கார்த்திக்கு பல இடங்களில் ஸ்கோர் செய்ய இடம் கிடைத்திருக்கிறது.

வரலாற்று சூழலை மிக அழகாக ரசனை குறையாமல் விறுவிறுப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பொன்குமார்.

இசையும், பின்னணி இசை படத்துக்கு வலு சேர்க்கிறது.

கிடைத்த பட்ஜெட்டில் கடும் உழைப்பை கொட்டி பிரமாண்டத்தை காட்டிய படக்குழுவுக்கு பாராட்டுகள் கிடைப்பது உறுதி…

சில இடங்களில் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

– கோடங்கி
மதிப்பீடு – 3.5/5

199 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன