திங்கட்கிழமை, அக்டோபர் 12
Shadow

பொங்கல் ரேசில் களமிறங்கும் விஷாலின் ‘சண்டக்கோழி-2’

 பி.எஸ்.மிஸ்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை’ படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2′ படத்திலும் விஷால்  நடித்து வருகிறார்.

இதில் `இரும்புத்திரை’ படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இரும்புத்திரை’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் `சண்டக்கோழி-2′ படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அறிவித்தார்.
விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகிறது.
`சண்டக்கோழி-2′ படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன