
சாந்தனு பாக்யராஜுக்கு வெற்றிக் கோட்டையாக மாறுமா விக்ரம் சுகுமாரின் “இராவண கோட்டம்”
துபாயில் பல் வேறு தொழில் நிறுவன்ங்களை நடத்தி வரும் திட்டக்குடி கண்ணன் ரவி தயாரிப்பில் சாந்தனு நடிப்பில் மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் இராவண கோட்டம்.
இந்த படத்தில் சாந்தனு ஜோடியாக கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு உட்பட பல நடித்திருக்கிறார்கள்.
இராமனாதபுரம் மாவட்டத்தில் உள்ள பலவேறு வித நடைமுறை சிக்கல்களை மிக் யதார்த்தமாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
தனது முதல்படமான மதயானை கூட்டம் மூலம் மிக துணிச்சலான விஷயத்தை மிக அழுத்தமாக பதிவு செய்த விக்ரம் சுகுமார் தனது இரண்டாவது படமான இராவண கோட்டம் படத்திலும் இதுவரை யாரும் சொல்ல துணியாத ஒரு நிஜத்தை மிக யதார்த்தமான கதையாக கொடுத்திருக்கிறராம்.

திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மகனாக இருந்தாலும் இது வரை ஒரு பெரிய வெற்றியோ, பிரேக் எதுவும் இல்லாமல் அதற்காக ஓடிக் கொண்டிருக்கும் சாந்தனுவுக்கு இந்த இராவண கோட்டம் தனி முத்திரை பதிக்கும் படமாக அமையும் என கூறப்படுகிறது.
காரணம் யதார்த்தமான கிராமத்து கதையில் சாந்தனு மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும், அவரோடு இணைந்து கயல் ஆனந்தியும் தன் பங்குக்கு பலம் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு மேலும் பலம் சேர்ப்பது போல் இளைய திலகம் பிரபு, இளவரசு ஆகியோரின் நடிப்பும் அசத்துகிறதாம்.
மொத்தத்தில் இராவண கோட்டம் கதை கண்டிப்பாக தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதிக்கும் என்றும் இயக்குனர் விக்ரம் சுகுமார் கதை மீண்டும் பேசு பொருளாக மாறும் என்றே கூறப்படுகிறது.
வரும் 12ம் தேதி உலகம் முழுவதும் இராவண கோட்டம் மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.
– கோடங்கி
