வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் குறையாத மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் – கோடங்கி விமர்சனம் 3.5/5

 

இருட்டும் அதில் ஒளிந்திருக்கும் குற்றங்களும், விசாரணைகளும் தான் “மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்” கதையாக மாற்றப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஒரு ஏரியாவில் இரவில் துவங்குகிறது கதை. வரலெட்சுமியின் காதலரான மகத் ஒரு க்ரைம் நடப்பதை பார்க்கிறார். பார்த்ததை போலீஸிடம் போய் சொல்கிறார். அதனால் மகத்திற்கு ஒரு ஆபத்து நிகழ்கிறது. அது என்ன ஆபத்து? அவர் பார்த்த க்ரைம் என்ன? அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? மகத் தப்பித்தாரா? வரலெட்சுமி என்ன ரியாக்ட் செய்தார்? சந்தோஷ் பிரதாப், ஆரவ் ஆகியோரின் பங்கு என்ன? என பல கேள்விகளுக்கு நல்ல திருப்பங்களோடு மினிமம் கியாரண்டி தரும் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன்.

போலீஸ் கேரக்டருக்கு பக்கா பொருத்தம் வரலெட்சுமி சரத்குமார்.
அவர் வசனம் பேசும் காட்சிகளை விட வசனம் இல்லாத காட்சிகளில் மிரட்டுகிறார். பல இடங்களில் கண்கள் பேசுகிறது. கலகத்தலைவன் படம் மூலமாக மிரட்டிய நடிகர் ஆரவ் இந்தப்படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக அசத்தி இருக்கிறார்.

அவரின் ஆட்டிட்யூட் வேறலெவல் ரகம். சந்தோஷ் பிரதாப் வழமை போல சிறப்பு. சுப்பிரமணிய சிவா கொடுத்த கேரக்டரை சரியாக பிரதிபலிக்கிறார்.

இதுபோன்ற கிரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் படங்களுக்கு இசையும் மிக முக்கியம் என்பதை உள்வாங்கி இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர். அதே போல ஒளிப்பதிவிலும் ஸ்கோர் எடுக்கிறார் கேமராமேன்.

முக்கியமாக சென்னையின் நைட் எஃபெக்ட் சீன்களில் பட்ஜெட் படம் என்ற சுவடே தெரியாத வகையில் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார்.

தேவையான ஷார்ப் எடிட்டிங்கும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஆஹா ஓடிடி வெளியிட்டுள்ள இப்படத்தின் கதையை விட அதன் திரைக்கதையும், மேக்கிங்கும் தான் இயக்குனர் தயாள் பத்மனாபனின் திறமைக்கு சான்று.

காட்சிக்கு காட்சி வரும் ஒவ்வொரு முடிச்சுகளும், அம்முடிச்சுகளை அவிழ்க்கும் விதமும் அழகாக கோர்க்கப்பட்டுள்ளது.

நாம் யூகிக்கக்கூடிய முடிவுகளும் தெளிவுகளும் கதையில் இருந்தாலும் அதை சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக்கொள்கிறது திரைக்கதை. ஒவ்வொரு சஸ்பென்ஸுக்கும் வேறு வேறு கேரக்டர்கள் வேறு வேறு பின்கதை சொல்வது இயக்குனரின் திறமையை வெளிச்சம் போடுகிறது.

சின்னச் சின்ன குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், படத்தின் முடிவில் நம்மை ஏமாற்றாமல் ரசிக்க வைக்கிறது மாருதிநகர் போலீஸ் ஸ்டேசன்.

குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் ஒரு முழுமையான சுவாரஸ்ய படத்தை கொடுத்த இதுபோன்ற இயக்குனர்கள் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப தேவை.

– கோடங்கி
3.5/5

262 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன