திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

பிரபுதேவாவின் படத்துக்கு லண்டனில் தான் இசையமைப்பேன் என்று அடம்பித்தவரால் ஐசரி கணேஷ்க்கு 2.5கோடி நஷ்டம் – கே.ராஜன் பகீர் குற்றச்சாட்டு

 

 

பிரபுதேவாவின் படத்துக்கு லண்டனில் தான் இசையமைப்பேன் என்று அடம்பித்தவரால் ஐசரி கணேஷ்க்கு 2.5கோடி நஷ்டம் – கே.ராஜன் பகீர் குற்றச்சாட்டு

ஸ்ரீகாந்த் தேவாவின் 100வது படமான பிரியமுடன் பிரியா பட இசை வெளியீட்டில்
சிறப்பு விருந்தினரான தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில்

100 படத்தில் முதலில் இருக்கும் ஒன்று நான் தான். அந்த முதலுக்கு யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றால், பாண்டியராஜனுக்கு தான்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரபுதேவா நடிப்பில் உருவான படத்துக்கு இசையமைத்துள்ளார் லண்டனில் தான் டியூன் போடுவேன் என்றார். படப்பிடிப்பு 3 நாட்களில் நின்று போனது. ஆனால் இசையமைப்பாளரால் மட்டுமே ஐசரி கணேஷுக்கு 2.5 கோடி நஷ்டம்.

இசையமைப்பாளர்கள் இதயமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தேவா அவருடைய சம்பளத்தை தந்தையிடம் தான் கொடுக்க சொல்வார். பெற்ற தாயும் தந்தையும் போற்றி வணங்குபவர்கள் கடைசி காலம் வரை நன்றாக இருப்பார்கள்.

இந்த படத்தில் நாயகர்கள் இருவரை மட்டுமே வைத்து பாடல் எடுக்கப்பட்டது. ஆனால் மற்றவர்களாக இருந்தால் அவர்களுடன் நடனமாட நடனக் கலைஞர்கள் கேட்பார்கள். தற்போது ஒரு படத்தின் பாடலில் 2000 பேர் நடனமாடுகிறார்களாம்.

தயாரிப்பாளரை காப்பாற்றுங்கள் படம் வளரும். இந்த விழாவுக்கு ஹீரோ ஹீரோயின் வந்திருக்கிறார்கள். பல படங்களின் விழாவுக்கு நடிகர் நடிகைகள் வருவதில்லை

இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன