வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

ஜனவரி மாதம் 4ம் தேதி`டிக் டிக் டிக்’ ஆடியோ ரிலீஸ்..!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்’. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

 

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் உள்ளிட்டோர் டப்பிங் பணியை முடித்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கின்றனர்
டி.இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை ஜனவரி மாதம் 4ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.
நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது
267 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன