வெள்ளிக்கிழமை, ஜூலை 10
Shadow

அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!

ஜனவரி 7ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்

398 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன