
லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன்,காஜல் அகர்வால்,சித்தார்த்,விவேக்,நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2. முடிவு பெறும் நிலையில் இறுதி கட்ட ஷூட்டிங்கில் பிசியாக் இருறது இந்தியன் 2 குழு.
இந்தியன் 2 என்று தொடங்கப்பட்ட இந்தப்படம் இப்போது இரண்டு படங்களாகிவிட்டன. இந்தியன் 2, இந்தியன் 3 ஆக அவை வெளிவரவரவிருக்கின்றன.
இப்போது இப்படத்தயாரிப்பில் ரெட்ஜெயண்ட் நிறுவனமும் கைகோர்த்திருக்கிறது.
இரண்டு படங்கள் என ஆகிவிட்டதால் இன்னும் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதாம்.
அப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல்காட்சிக்கான படப்பிடிப்பு வடசென்னையில் நடக்கிறது..
வழக்கமாக கோட்டூர்புரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் படப்பிடிப்பு நடத்துவார் ஷங்கர். அது இப்போது இல்லையென்பதால் வடசென்னைக்குப் போய்விட்டார்.
இன்று தொடங்கவிருக்கும் படப்பிடிப்புக்காகப் பலநாட்கள் முன்பே ஒட்டுமொத்த வீடுகளுக்கும் வர்ணம் பூசி சுவர்களில் இந்தியன் தாத்தா படத்தை வரையும் வேலைகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தியன் தாத்தாவின் புகழ்பாடும் பாடல் என்பதால் இந்த வேலைகள் நடக்கின்றன என்று சொல்கிறார்கள்.
இங்கு சுமார் ஒரு வாரம் படப்பிடிப்பு நடக்குமென்று சொல்லப்படுகிறது. இதனால் இந்தாண்டு ஏப்ரலில் ரிலீஸ் சந்தேகமே.
