சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

ஆணும் பெண்ணும் செக்ஸ் இல்லா நட்புடன் பழக முடியுமாம்- சொல்கிறார் “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” இயக்குனர் பிரசாத் 

ஆணும் பெண்ணும் செக்ஸ் இல்லா நட்புடன் பழக முடியுமாம்- சொல்கிறார் “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” இயக்குனர் பிரசாத்

ப்ரீத்தி கரண், செந்தூர் பாண்டியன், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. பிரசாத் ராமர் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பாடகர் பிரதீப் குமார் இசையமைத்து தயாரித்துள்ளார்.

இளைஞர்களும், இளம் பெண்ணும் நட்பாக பழக முடியும், செக்ஸை தாண்டிய உறவு அவர்களுக்குள் இருப்பது சாத்தியமே என்று முதன்முதலில் உரக்கச் சொன்ன திரைப்படம், விக்ரமனின் புது வசந்தம். அந்தப் படத்தின் பாணியில், இரு இளைஞர்கள் மற்றும் மூன்று இளம்பெண்களின் ட்ராவலை சொல்கிறது, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே திரைப்படம்.

இப்படம் குறித்து இயக்குநர் பிரசாத் ராமர் கூறுகையில், “இப்படம் ஒரு வளர்ந்து வரும் குழந்தைகளை பற்றிய படம். படத்தில் ஒரு ட்ராவலும் இருக்கும். ரெண்டு பசங்க மதுரையிலிருந்து கிளம்பி ஒரு பொண்ண பார்ப்பதற்காக மாயவரம் போவாங்க. அந்த பசங்களின் நோக்கம் நடக்குதா இல்லையா என்பது தான் கதை. 2019ல் ஆரம்பிக்கப்பட்ட படம் இது. வேகமாக மாறிவரும் சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் படும் அவலத்தையும், அவர்கள் மீதான அணுகுமுறையையும் இந்த படம் பேசுகிறது. மதுரை மற்றும் மாயவரம் ஆகிய இடங்களில் 42 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

41 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன