ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

ரசிகர்கள் முன்னிலையில் அரசியல் திட்டத்தை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்!

 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் உள்ளவர் ரஜினிகாந்த். இவருக்கு வயது வித்தியாசமின்றி பட்டிதொட்டியெங்கும், ரசிகர்கள் உள்ளனர். பெரியவர் முதல் குழந்தைகள் வரை இவரது நடிப்பு மற்றும் ஸ்டைலுக்கு ரசிகர்கள். திரைப்படங்களில் மட்டுமின்றி அவ்வப்போது பொது வெளியிலும் அரசியல் கருத்துக்களை கூறியவர் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்தின் இந்த நடவடிக்கைகளால் அவர் அரசியலில் ஈடுபட போகிறார் என்ற பேச்சு 1990கள் முதலே இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் இதுவரையில் அந்த விஷயத்தில் பிடிகொடுக்கவேயில்லை. நடிப்பு மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டையும் மட்டும் இரு கண்களாக பாவித்து வருகிறார் ரஜினிகாந்த்

இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிப்பு துறையில் இருந்து ஓரளவுக்கு விலகி, அரசியலில் இறங்க உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில், கடந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த். டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் திட்டத்தை வெளியிடப்போவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்

காலை 8.30 மணியளவில் கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 6வது நாளாக ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி. அப்போது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். நண்பகல் நேரத்தில், அவர் ரசிகர்களுடனான சந்திப்பை நிறைவு செய்துவிட்டு, ரசிகர்கள் முன்னிலையிலேயே தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க உள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் எப்படியான வடிவுடையதாக இருக்கும் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. நாளைதான் அது வெளியாகும். இந்த தகவல்களால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஊடகங்களும் நாளைய ரஜினி அறிவிப்பு செய்தியை உடனுக்குடன் வழங்க ஆயத்தமாகி வருகின்றன. ரஜினி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் அந்த அறிவிப்பு நாளை வெளியாவதால் தமிழகம் முழுக்க ரஜினி ரசிகர்கள் நடுவே பெரும் பரபரப்பு நிலவுகிறது.

391 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன