புத்தாண்டில் நான் எடுத்த முடிவு அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதில் கூற போவதில்லை: டிடிவி தினகரன்.
அ.தி.மு.க.வில் உள்ள நல்லவர்கள் எங்களை நோக்கி வர இருக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு இருக்கிறார்கள்.
அதனால்தான் ஊட்டி பொதுக்கூட்டத்தில் முதல்- அமைச்சர், அமைச்சர்கள் பலர் பேசும்போது, ஒரு அளவை தாண்டி தாக்கி பேசுகிறார்கள் என்றால் பயம்தான் காரணம்.
ஏனென்றால் தேர்தலில் அசந்து இருந்த நேரத்தில் நாங்கள் வெற்றி பெற்றதாக எங்களை பார்த்து கூறுகிறார்கள். அப்படியானால் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள். தியானம் பண்ணவா போனீர்கள்?

ஓ.பி.எஸ். பேசும்போது கட்சியில் அவர் சீனியர் என்கிறார். அம்மா காலத்தில் தலைவர் காலத்தில் இருந்து கட்சியில் அவர் இருந்திருக்கலாம். என்னை விட அவர் 12 வயது மூத்தவர்.
அம்மா தலைமை ஏற்றபோது போடியில் இவர் ஜானகி அம்மாள் அணியில் இருந்து கொண்டு வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு பவர் ஏஜெண்டாக இருந்தவர். இவர் 1999 தேர்தலில் எனக்காக கிராமம் தோறும் பிரசாரம் செய்ததாக கூறுகிறார்.
இவர் பெரியகுளத்தில் ஓட்டு கேட்டிருக்கலாம். அவ்வளவுதான். இவர்கள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். அதற்கெல்லாம் இனிமேல் நான் பதில் சொல்ல போவதில்லை.
புத்தாண்டில் நான் எடுத்திருக்கிற முடிவு என்னவென்றால் இவர்களுக்கு நான் பதில் சொல்ல போவதில்லை. தயவு செய்து அவர்கள் என்ன சொன்னாலும் அவர்களை பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்.
தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம். உங்கள் தலைமையின் கீழ் எம்.எல். ஏ.க்கள் வருவார்களா? என்று கேட்கிறீர்கள். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மறுபடியும் தேர்தல் வந்து அதில் ஜெயிச்சி வருவது ஒருமுறை.
