ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

ரஜினி அரசியல் அறிவிப்பு…. வரவேற்பும் வாழ்த்தும்

ரஜினி அரசியல் அறிவிப்பு…. வரவேற்பும் வாழ்த்தும்

 

கமல்ஹாசன்


ரஜினிகாந்த்தின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரஜினியே வருக, வருக என்று கமல்ஹாசன் வெல்கம் டுவீட் போட்டுள்ளார்.

முக அழகிரி

ரஜினியின் அரசியல் வருகையால் மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறினார். ரஜினி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என நினைத்தாரோ அவற்றையெல்லாம் செய்ய வேண்டும். ரஜினிகாந்தை விரைவில் நேரில் சந்திப்பேன் – முக அழகிரி

நடிகர் விவேக்

அதிர்ச்சி ஆனால் ஆனந்த அதிர்ச்சி! அளித்து விட்டார் ரஜினி… இனி அவர் பின் வாங்கக் கூடாது. உணர்ச்சிப் பெருக்கில் ரசிகர்கள் கட்டுப்பாடு மீறல் கூடாது.சட்டம் ஒழுங்கு முக்கியம். வாழ்த்துக்கள் -நடிகர் விவேக்

தமிழிசை சவுந்தரராஜன்

ஊழலற்ற நிர்வாகத்தை தருவதற்கானத் தான் 1996ல் ஊழல் மலிந்திருந்த உடனேயே தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது வாய்ஸ் கொடுக்கிறேன் என்று சொன்னார். இப்போதைய அரசியல் சூழலில் சமீப காலமாக ஆர்கே நகர் போன்ற தேர்தல்களை பார்க்கும் போது தமிழகத்தில் ஊழலை எதிர்த்து போட்டியிட பல கரங்கள் தேவைப்படுகிறது. பலம் இன்னும் கூடுதலாக தேவைப்படுகிறது.
இதனால் ஊழலற்ற நிர்வாகத்தை வரவேற்கும் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று தான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்.


எங்களின் முயற்சி தாமதமடைந்தாலும் நிச்சயம் வெற்றி பெறும். ரஜினி ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வரத் தான் அரசியலுக்கு வருகிறேன், இந்த காலகட்டத்தில் அரசியலுக்கு வராவிட்டால் எனக்கு மன்னிப்பே கிடையாது என்று சொல்லி இருக்கிறார். ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கிறேன்.


ரஜினி அரசியலால் யாருக்கும் பின்னடைவு இல்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் முடிவு எடுக்கிறேன் என்று ரஜினி சொன்னால் அவர் நிச்சயம் மோடியால் தான் தர முடியும். இதனால் அவர் பாஜகவுடன் தான் சேர்வார் என்பது என்னுடைய கணிப்பு – தமிழிசை சவுந்தரராஜன்

சுப்ரமணியன் சாமி

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் அவரிடம் எந்த கொள்கைகளோ, கோட்பாடுகளோ இல்லை. ரஜினியை ஊடகங்கள் தான் பெரிதாகக் காட்டுகின்றன. தமிழக மக்கள் புத்திசாலிகள் – சுப்ரமணியன் சாமி

அமைச்சர் ஜெயக்குமார்

இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ள ரஜினிக்கு எனது வாழ்த்துகள் – அமைச்சர் ஜெயக்குமார் .

410 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன