வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 28
Shadow

புத்தாண்டை மணல் சிற்பத்தால் வரவேற்ற சுதர்சன் பட்நாயக்

மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் தனது எழில்மிகும் மணல் ஓவியத்தால் 2018-ம் ஆண்டை வரவேற்றுள்ளார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்கள் மனதில் பதியவைத்து வருகிறார்.
தேசிய அளவில் தலைசிறந்த மணல் சிற்ப கலைஞராக திகழும் இவர், சர்வதேச அளவில் பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.
2018-புத்தாண்டையொட்டி பூரி கடற்கரையில் தனது எழில்மிகும் மணல் ஓவியத்தால் வரவேற்றுள்ளார். இந்த  ஓவியங்களை ஒடிசா மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மக்களும் கண்டு களித்து வருகின்றனர்.
353 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன