ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 14
Shadow

காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் “சூரியனும் சூரியகாந்தியும்”!

 

காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் “சூரியனும் சூரியகாந்தியும்”!

இசை விழாவில், பாடல்கள் மற்றும் டிரைலரை ஆர்.வி.உதயகுமார் வெளியிட மன்சூர் அலிகான் பெற்றுக் கொண்டார்!

பேரரசு, அப்புக்குட்டி, சந்தான பாரதி, ராசி அழகப்பன், சச்சின் மாலி, ஆர்.சுந்தர்ராஜன், எழில், மங்களநாத குருக்கள், சௌந்தர பாண்டியன், விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, விழாவை சிறப்பித்தனர்!

“சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் சந்தான பாரதி, செந்தில் நாதன், ராஜசிம்மன், ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.

34 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன