
ஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும் என்பது எனது கருத்து: டி.டி.வி தினகரன்
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் சென்னை அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது பேசிய அவர்…
விசாரணை ஆணையத்தில் கேட்டுக்கொண்டதின் பேரில் வீடியோ ஆதாரத்தை கொடுத்து உள்ளோம்,ஏற்கனவே வெற்றிவேல் கொடுத்தின் தொடர்ச்சிதான் தற்போது கொடுத்துள்ளோம்.

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகம் என்று சில வார்த்தையை பேசி உள்ளார், ஆன்மிகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாக தான் முடியும்.
ரஜினி சிஸ்டம் சரியில்லை என்கிறார்,சிஸ்டம் எப்போதுமே சரியாக தான் இருக்கிறது,நடைமுறை படுத்துவது தான் தவறாக இருக்கும்.
மாநில சுயேட்சிக்கே கேடு விளைவிக்கும் விதமாக மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க முயற்சிக்கின்றது.

சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் கதிராமங்கலம்,நெடுவாசல் போன்ற மக்களின் பிரச்சினைகளை சட்ட மன்றத்தில் எடுத்து உரைப்பேன்.
முஸ்லிம் பெண்களுக்கு உன்மையாகவே உதவி செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு மாநிலத்தின் இஸ்லாமிய அமைப்பை சார்ந்தவர்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
பெண்களுக்கு 80 சதவிகிதம் கூட இட ஒதுக்கீட்டை கொண்டு வரலாம், ஆனால் மத்திய அரசு இதையெல்லாம் செயல் படுத்தாது.
தனி நபர் தன்னை ஒழுங்கு படுத்தி கொள்வதற்க்கு தானே ஆன்மிகம் தவிற அரசியலுக்கு அது ஏற்புடையது அல்ல.
மார்ச் மாதத்திற்குள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கின்றேன்.
நாற்பது ஆண்டு கால அனுபவம் உள்ள மு.க ஸ்டாலின் ஆர்.கே நகரை எப்படி தவற விட்டார் என்றே எனக்கு தெரியவில்லை,அவரது தந்தை இருந்திருந்தால் வேறு யுத்திகளை கையாண்டு இருப்பார்.
நான் வெற்றி பெற்றதால் பொருத்து கொள்ள முடியாமல் வேண்டும் என்று விமர்சனம் வைக்கிறார் ஸ்டாலின், திமுகவுடன் கூட்டு வைத்து செயல்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் கூறினார்கள், திமுக ஆர்.கே.நகரில் டெபாசிட் கூட பெறமுடியவில்லை இதன் மூலமாவது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் திமுகவுடன் நாங்கள் கூட்டு வைக்கவில்லை என்று கூறினார் தினகரன்.
