புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா தொடங்க உள்ள நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு ரசிகர்கள் திரைப்பட விழாவில், படம் பார்க்க இலவசமாக அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்குது. இந்த சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களை பொதுமக்கள், ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்.
சர்வதேச புகழ்பெற்ற பிரசன்ன விதனகே திரைப்பட உருவாக்கத்துக்கான சிறப்பு வகுப்பையும் நடத்துகிறார்.
இது தொடர்பாக புதுச்சேரி திரை இயக்கம் செயலர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க திரை இயக்க நிர்வாகி ராமச்சந்திரன் ஆகியோர் பேசிய போது, “புதுச்சேரியில் அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நாளை மாலை சர்வதேசத் திரைப்பட விழா 2024 துவங்குகிறது. 3 நாட்கள் நடக்கும் இந்நிகழ்வில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படும். இவற்றை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்.
திருவிழாவின் தொடக்கமாக, சமீபத்தில் வெளிவந்த ‘பாரடைஸ்’ திரைப்படம் இன்று ஆகஸ்ட் 2-ம் தேதி இரவு 7 மணிக்கு திரையிடப்படும். இப்படத்தை இயக்கிய சர்வதேச புகழ்பெற்ற இலங்கையைச் சேர்ந்த பிரசன்ன விதனகே முன்னதாக இவ்விழாவை தொடக்கி வைக்கிறார். இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், திரை இயக்குநர் எம்.சிவக்குமார், திரைக்கலைஞர் ரோகிணி, தமுஎகச பொதுச்செயலர் ஆதவண் தீட்சண்யா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: அறிமுகப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியல்
ஆகஸ்ட் 3ம் தேதி அமெரிக்க திரைப்படம் நியூக்ளியர் நவ் காலை 9.30 மணிக்கு திரையிடப்படும். காலை 11.45 மணிக்கு திரைப்பட வடிவம் உருவாக்குதல் தொடர்பாக இயக்குநர் பிரசன்ன விதனகே சிவக்குமார் மோகனன் உடன் இணைந்து சிறப்பு வகுப்பு நடத்துகிறார். பின்னர் கலந்துரையாடலும், கேள்வி பதில் நிகழ்வும் நடக்கும்.
பிற்பகல் 2.30 மணிக்கு சுவீடனின் ‘டிரையாங்கிள் ஆப் சேட்னஸ்’, திரைப்படமும் மாலை 5.45 மணிக்கு ‘லாபடா லேடீஸ்’ ஹிந்தி திரைப்படமும் திரையிடப்படும்.
ஆகஸ்ட் 4-ம் தேதி காலை 9.30 மணிக்கு துருக்கியின் ‘அபவுட் டிரை கிரேசஸ்’ திரைப்படமும், மதியம் 2 மணிக்கு ஈரானின் ‘லெயிலாஸ் பிரதர்ஸ்’ திரைப்படமும் மாலை 6 மணிக்கு பிரான்ஸின் ‘தி டேஸ்ட் ஆப் திங்ஸ்’ திரைப்படமும் திரையிடப்படும். அதைத்தொடர்ந்து பார்வையாளர்கள் கருத்துகளை கேட்டறிவோம்” என்றனர்.