வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றம் ஆக மாறியது..!

 


ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றம் ஆக மாறியது..!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த ஆண்டின் கடைசி நாள் மறக்க முடியாத நாளாக மாறிப்போனது.
ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அவரது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் முன்பு அறிவித்தார். ஆன்மீக அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சியின் பெயர் கொடி என்ன? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் தொடங்க இருக்கும் கட்சியில் சேர நினைப்பவர்கள், மாற்றத்தை விரும்புபவர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்த ரஜினி அதற்காக புதிய இணையதள முகவரி ஒன்றையும் அறிமுகப்படுத்தினார்.
அந்த இணையதளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இதுவரையில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட ரஜினி மன்றங்கள் உள்ளன. 30 ஆயிரம் மன்றங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இந்நிலையில், ரஜினியின் `அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்’ தற்போது `ரஜினி மக்கள் மன்றம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நல்ல அரசியல் தலைமையை தான் எதிர்பார்க்கிறார்கள். ரசிகராக இல்லை வாக்காளனாக என்று பல இடங்களில் ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையறிந்த ரஜினிகாந்த் உடனடியாக ரசிகர் மன்றம் என்பதை மாற்றி மக்கள் மன்றம் என பேர் மாற்றினார்.
பாபா முத்திரையில் இருந்த தாமரை பிஜேபி கட்சிக்கு உரியது என்பதால் அதையும் உடனடியாக நீக்கினார்.
அதே போல ஊடக விவாதங்களில் ரஜினி ரசிகர் என இனியாரும் கலந்து கொள்ள முடியாது என்றும் விவாதங்களில் கலந்து கொள்ள நாங்கள் யாரையும் நியமிக்க வில்லை என மன்ற நிர்வாகி அறிவித்து விட்டார்.

254 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன