புதன்கிழமை, அக்டோபர் 14
Shadow

டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை”

 

டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை”

புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் “தென் சென்னை”
அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயர்ச்சிகளில் இறங்கியுள்ளார்.
இதில்முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்டின், இந்த படதிற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார். குறைந்த அளவு திரைஅரங்குகளிள் வெளிவந்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
படம் பார்த்த அனைவரும் கதை, திரைக்கதை, அனைவரின் நடிப்பு மற்றும் புதிய படக்குழுவினரின் முயர்ச்சிகளுக்கு பெரும் பாராட்டைத் தந்தனர்.

இந்த நிலையில் இப்படம் டென்ட்கொட்டா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன