வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25
Shadow

பெண்களை ஷாக் ஆக்கும் “ராபர்” கோடங்கி விமர்சனம் 3/5

 

 

பெண்களை ஷாக் ஆக்கும் “ராபர்” கோடங்கி விமர்சனம் 3/5

கிராமத்தில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞன் ஒருவன், பண ஆசைக்காகத் தடம் மாறுவதையும், அந்தப் பண போதை அவனை எப்படி கொடூரமானவனாக அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டு செல்கிறது என்பதையும் நகை பரிமாற்றத் தொடர்புகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத் தனங்களையும் சொல்லும் திகிலான கதைதான் ‘ராபர்’.

ஒவ்வொரு நாளும் பேப்பரிலும், டிவியிலும்  வரும் நகைப் பறிப்பு செய்திகளை கேட்டாலும் , அதில் அப்பாவி பெண்கள் பலியானது தெரிந்தாலும் அது ‘யாருக்கோ’ என்று எளிதில் கடந்து செல்கிறோம்.  ஆனால் நகைப்பறிப்புக்குப் பின் உள்ள ‘திருட்டு’ நெட்வொர்க், அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள், அந்த நகைகளை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்கிற விவரத்தை  பரபரப்பாக  திகில் மூடில் தர முயற்சித்து இருக்கிறார்  அறிமுக இயக்குநர் எஸ்.எம்.பாண்டி.

சிறைக்குப் புதிதாக வரும் கைதிகளிடம் பழைய கைதியான சென்ராயன், ராபர் கதையை விவரிப்பது போன்ற நான் லீனியர் முறையில்  திரைக்கதையும் இறுதியில் வருகிற கிளைமாக்ஸ்  ட்விஸ்டும் பாஸ் மார்க் ரகம்தான்.

கதை, திரைக்கதை, வசனத்தை,’மெட்ரோ’ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியிருப்பதாலோ, என்னவோ பல இடங்களில் ‘மெட்ரோ’ தாக்கம் தெரிந்தாலும் படத்துக்குப் பாதகமில்லை

கொடூரமாக மாறும் அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்துக்கு நாயகன் மெட்ரோ சத்யா கச்சிதமாகப் பொருந்துகிறார். ஜெயப்பிரகாஷ் தன் மகளை இழந்து பரிதவிப்பவராகவும் பழிவாங்கும் எண்ணத்தையும், ஆத்திரத்தையும் ஒருசேர கலந்து பயங்கர எமோஷனில் உருக வைக்கிறார்.

அவருக்கு உதவும் முன்னாள் போலீஸ்காரர் பாண்டியன் யதார்த்தமான நடிப்பில் கவனிக்க வைக்கிறார். வழக்கமாக காமெடி கூட்ட்த்தில் கலந்து கட்டி அடிக்கும் டேனி இதில் மாடர்ன் வில்லனாக அதிர்ச்சிக் கொடுக்கிறார். டேனியின் இன்னொரு முகம் வெளியில் தெரிவதால் வாய்ப்புகளுக்கு வழி பிறக்கும்.

கிளைமாக்ஸில் அம்மாவான தீபா சங்கர் எடுக்கும் முடிவு பகீர் ரகம்.

சின்ன சின்னக் குறைகள் இருந்தாலும் த்ரில் திகில் அனுபவத்தைத் தருகிறது ‘ராபர்’. திரைக்கதைக்கு ஜோகன் சிவனேஷின் பின்னணி இசையும் கூடுதல் பலம் சேர்க்கிறது.

மொத்தத்தில் ராபர் திகில் ரகம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன