ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

முதல் படத்திலேயே முத்தக்காட்சியில் தம்பி… ஆதங்கப்பட்ட அண்ணன் “ஓஹோ எந்தன் பேபி” கலாட்டா!

 

 

முதல் படத்திலேயே முத்தக்காட்சியில் தம்பி… ஆதங்கப்பட்ட அண்ணன் “ஓஹோ எந்தன் பேபி” கலாட்டா!

ராகுல் மற்றும் விஷ்ணு விஷால் தயாரிப்பில் ருத்ரா, மிதிலா பால்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. படத்தின் ஹீரோ ருத்ரா விஷ்ணு விஷாலின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ருத்ரா, மிதிலா பால்கர், மிஷ்கின், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலையில் வெளியாகிறது.

இந்த படம் குறித்து விஷ்ணு பேசும் போது “நான் சினிமாவில் வரும் போது சூழல்களை கையாள சொல்லிக் கொடுக்க ஆட்களே இல்லை. அனால் தம்பிக்கு நான் இருக்கிறேன்.

நடிகர் விஷ்ணு விஷால் ஆகவே இந்த படத்தில் வருகிறேன்.
நான் நடித்த படங்களில் காதல் காட்சிகளுக்கு அதிக வேலை இல்லை என்பதால் காதல் கதையாக இந்த கதை இருந்ததாலும் இதில் நடித்தேன்.

எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் முத்தக்காட்சிகள் எதுவும் இல்லை.
ஆனால் இந்த அறிமுக படத்தில் தம்பிக்கு 3 முத்தக்கட்சிகள் இருக்கிறது.

படத்தை நடிகர் கிருஷ்ண குமார் இயக்கி இருக்கிறார்.

ஹீரோ ருத்ரா ஏற்கனவே இயக்குனர் முருகதாஸ் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இந்த படம் பெரும் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் பேசுகிறார் ருத்ரா.

175 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன