
எனக்கும் தனுஷுக்கும் எந்த உரசலும் இல்லை வீடியோ வெளியிட்ட வெற்றிமாறன்!
சூர்யா நடிப்பில் வெற்றிமாற இயக்குவதாக இருந்த வாடி வாசல் தள்ளிப்போவதால் சிம்புவை வைத்து ராஜன் வகையறா என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கப்போகிறார். இதற்கான முன்னோட்ட ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த சூழலில் தனுஷ் நடித்த வடசென்னை பட்த்தின் பார்ட் 2 விரைவில் தொடங்கும் என சமீபத்தில் தனுஷ் அறிவித்தார்…இந்த பட்த்தையும் வெற்றிமாறனே இயக்க இருக்கிறார்.
இந்த சூழலில் சிம்புவுடன் வெற்றிமாறனுடன் இணைந்தது தனுஷுக்கு பிடிக்காமல் போனதால் ராஜன் வகையறா பட்த்தில் வடசென்னை பட சாயல் வந்தால் ராயல்டியாக 20 கோடியை தரவேண்டும் என தனுஷ் கேட்டதாகவும், அதற்கு அப்படியானால் வடசென்னை 2 இயக்க 100 கோடி சம்பளமாக தர வேண்டும் என வெற்றிமாறன் திருப்பிக் கேட்டதாகவும் தகவல்கள் பரவியது.
இந்த சூழலில் வெற்றிமாறன் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைத்து விட்டார்.
அதில் எனக்கும் தனுஷுக்கும் எந்த முரணும் இல்லை. சிம்புவுடன் படம் செய்வதற்கு தனுஷ் மகிழ்ச்சி தான் வெளிப்படுத்தினார். வடசென்னை 2 என்பது தனுஷுக்கான படம். ராஜன் வகையறா பட்த்தில் வட சென்னை பட கதாபாத்திரங்களில் உள்ள பலரும் இருப்பார்கள் ஆனால் அந்த கதைக்கும் இத்ற்கும் எந்த தொடர்பும் இல்லை. வடசென்னை 2 என்பது அன்புவின் கதை.
ராஜன் வகையறா அமீரின் கதை என விளக்கம் அளித்து சர்ச்சைகளுக்கு எண்டு கார்டு போட்டுவிட்டார்.
தனுஷ் எனக்கு பல விதத்தில் உதவி செய்து இருக்கிறார் என்றும் குறிப்பிட்டதால் மீண்டும் இந்த விஷயம் கோலிவுட்டில் பரபரப்பாகி உள்ளது.
