ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

பொங்கல் ரேசில் களமிறங்கிய சூர்யா,விக்ரம்,பிரபுதேவா..!

 


பொங்கல் ரேசில் களமிறங்கிய
சூர்யா,விக்ரம்,பிரபுதேவா..!

இந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது ரசிகர்களை திருப்திபடுத்த 7 படங்கள் களத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல பல படங்கள் ஜனவரி வெளியீடு என்று பல நாட்களுக்கு முன்பே விளம்பரங்களும் வெளியிட்டு வந்தன.
இந்த நிலையில், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், பிரபுதேவாவின் குலேபகாவலி, விக்ரமின் ஸ்கெட்ச் என 3 படங்கள் மட்டுமே பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளது.
பொங்கலுக்கு இரு தினங்களுக்கு முன்பே 12ம் தேதியே இந்த படங்கள் ரிலீஸ் ஆகிறது.

இதுதவிர அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் `மதுர வீரன்’, விமல் நடிப்பில் `மன்னர் வகையறா’ உள்ளிட்ட படங்களும் பொங்கல் ரேசில் கலந்து கொள்ள முயற்சித்தன.
இதில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளர் மீது ஒன்றரை கோடி ரூபாய் கடன் புகார் ஒன்றை மன்னர் வகையாறா தயாரிப்பாளரும், நடிகருமான விமல் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக அந்த படம் சென்சார் ஆன நிலையிலும் ரிலீஸ் ஆகாமல் ஒதுங்கியது.
பூபதி பாண்டியன் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக விமல் நடிப்பில் உருவாகியுள்ள மன்னர் வகையாறா படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் பொங்கல் ரேசில் கலந்து கொண்டால் குறைந்த அளவே தியேட்டர்கள் கிடைக்கும் என்பதால் ஜனவரி 26ம் தேதியை குறிவைத்து கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்டன.
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மதுரவீரன் படமும் போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாமல் ஒதுங்கியது.


பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவை பொறுத்தே அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.
இதில் விமலின் மன்னர் வகையறா படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமும், முழுக்க முழுக்க நடித்திருக்கிற அனைவருமே காமெடியில் கலக்கியிருப்பதால் படம் இருப்பதால் அதிக தியேட்டர்களில் படத்தை திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள் இதன் காரணமாகவே பொங்கல் கூட்டத்தில் ஓடாமல் தனியாக களம் இறங்க நேரம் பார்த்திருக்கிறது மன்னர் வகையறா.

428 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன