வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி -நடிகர் கார்த்தி

மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி -நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி பேசும் போது,

என் நண்பன் ரவி தயாரிப்பாளராக ஆகும்போது ஒரு நண்பனாக நான் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இங்கு வந்து பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தயாரிப்பு நிறுவனத்தை இவ்ளோ பெரிய விழாவாக நடத்தியதில்லை.

அதுமட்டுமில்லாமல், அவர் ஏன் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்று கூறிய போது மிகவும் பெருமையாக இருந்தது. இப்போது தன்னை கை கொடுத்து தூக்கி விட மாட்டார்களா என்று பல திறமையான இயக்குனர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ரவிக்கு அப்பா இருந்தார், அண்ணன் இருந்தார். ஆனால், அனைவருக்கும் நான் இருக்கிறேன் என்று ரவி கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும், எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. ப்ரோ கோட் என்பதை கேட்கும் போது புதுசாக இருக்கிறது. ஆர்வமாக இருக்கிறது.

ரவியை நான் முதன்முதலாக பார்த்தது எப்போது என்று கூற ஆசைப்படுகிறேன். நான் சினிமாவுக்கு வரும்போது சண்டை பயிற்சி வகுப்பிற்கு சென்றேன் அங்கு தான் ரவி அண்ணனை சந்தித்தேன். சாதாரணமாக நாங்கள் மூன்று அடியில் குதித்தால் ரவி அண்ணன் 10 அடியில் குதிப்பார்.

ஐயையோ! சினிமா என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று பயந்தேன். பிறகு எங்களை அழைத்து சென்று ஜூஸ் வாங்கி கொடுப்பார். காசு கொடுத்தால், நீங்க எல்லாம் சின்ன பசங்க காசு குடுக்க கூடாது என்று அவரே கொடுப்பார்.

சிறிது காலத்திற்கு பிறகு தான் அவர் என்னைவிட சின்ன பையன் என்று தெரிந்தது. அதன் பிறகு அண்ணா என்று கூப்பிட்டால் அடி விழும் என்று ரவி என்று கூப்பிட ஆரம்பித்தேன்.

பிறகு அவருடைய முதல் படத்தை பார்த்த பிறகு அவருடைய உடைகள் போன்று எல்லா விஷயங்களையும் பேசுவோம். அப்படித்தான் எங்களுடைய நட்பு ஆரம்பித்தது.

பொன்னியின் செல்வன் படத்தில் ரவியை பார்த்து நான் மிகவும் மகிழ்ந்தேன். ஏனென்றால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலேயே ராஜாவாக நடிக்கப் போவது யார் என்ற ஒரு கேள்வி இருந்தது.

தாய்லாந்தில் படப்பிடிப்பில் அவர் ராஜாவாக உக்காந்திருந்ததை பார்த்தபோது ராஜாவுக்கு உரிய அனைத்து லட்சணங்களும் அவரிடம் இருந்தது.

அதைவிட அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்றால் மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி. அதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.

இரவு உனது நேரத்தில் எனக்கு ஒரு கதையை சொன்னார். அதை கேட்டதும் ஜிம் கேரி அளவிற்கு இருந்தது அவருடைய ஒரு பக்கம் மட்டும் தான் நமக்கு தெரியும்.

ராஜா அண்ணா கூட திரையில் இன்னும் அதை காட்ட வில்லை, யோகி பாபுவை வைத்து இயக்கும் படத்தில் அதை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

ரவி எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார் என்று தான் நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவருக்குள் சீரியஸ் ஆன ஒரு மனிதர் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. உலக சினிமா அனைத்தையும் அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருப்பார்.

அவருக்கு படத்தொகுப்பும் மிக நன்றாக தெரியும். அதாவது ஒருவன் படிக்காதது போன்று இருக்கும். ஆனால், நல்ல மார்க் எடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா?! அது போல் தான் ரவியும், என்றார்.

 

 

 

321 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன