ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

சிக்கிம் மாநில விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்

சிக்கிம் மாநில விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
மாநில முதல்–அமைச்சர் பவன்குமார் சாம்லிங் தலைமையில் நடந்த இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.


விழா மேடையில் சிக்கிம் மாநிலத்தின் விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமானை நியமிப்பதற்கு முதல்–மந்திரி விருப்பம் தெரிவித்தார். இதை அவரும் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பவன்குமார் சாம்லிங், ‘‘எனது பணிவான பரிந்துரையை ஏற்று சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தனது பொன்னான நேரத்தை செலவிட ஒப்புக்கொண்ட ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி’’ என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், ‘‘எனக்கு முக்கியத்துவம் தந்து கவுரவம் அளிக்கும் விதமாக மாநிலத்தின் விளம்பர தூதராக அறிவித்ததற்கு நன்றி. சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை கொண்டுள்ளது’’ என்று பாராட்டினார்.

234 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன