வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

தேர்தலில் சீட் தருவதற்கு லஞ்சமாக நடிகையை நிர்வாணமாக நிற்கச் சொன்ன ராஜபக்‌ஷே நண்பர்..!

 


தேர்தலில் சீட் தருவதற்கு நிர்வாணமாக நிற்கச் சொன்ன ராஜபக்‌ஷே நண்பர்..!
நடிகை வெளியிட்ட பகீர் குற்றச்சாட்டு

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட நடிகை மதுசா ராமசிங்கே விரும்பியுள்ளார்.


இது தொடர்பாக மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரிடம் நடிகை மதுசா உதவி கேட்டிருக்கிறார், ராஜபக்சேவின் நண்பரோ, நடிகை மதுசாவை படுக்கைக்கு வரும்படி அழைத்ததோடு முழு நிர்வாணமாக நிற்க வேண்டும் என ‘லஞ்சம்’ கேட்டிருக்கிறார்.


இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை மதுசா இந்த விவகாரம் குறித்து கட்சியின் நிர்வாகியான முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவை சந்தித்து அவர் நண்பரின் நிர்வாணமாக நிற்க சொன்ன கொடுமையை சொல்லியிருக்கிறார்.


ஆனால், இதை கேட்ட மகிந்த ராஜபக்சேவோ அந்த குற்றச்சாட்டை கண்டுகொள்ளாமல் வெறும் சாரி மட்டும் கூறி விட்டு போய்விட்டார்.


என்னை நிர்வாணமாக நிற்க சொன்ன நபர் மீது ராஜபக்சே எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. என நடிகை மதுசா ராமசிங்கே ஆவேசப்பட்டுள்ளார்.


இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழ் பெண்களை கற்பழித்து கொன்ற பாதக கும்பலுக்கு தலைவனாக இருந்த ராஜபக்‌ஷேவின் நண்பர் இப்படித்தான் இருப்பார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.


நடிகையின் இந்த நிர்வாண கொடுமை குற்றச்சாட்டு இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

319 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன