
ஃபேன்லி ( Fanly ) செயலியை அறிமுகப்படுத்தி வாழ்த்திய நடிகர் சிவகார்த்திகேயன் !!
Fanly என்பது ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்குமிடையேயான பாதுகாப்பான, தனிப்பட்ட மற்றும் நேர்மறையான தொடர்புகளை வழங்கும் ஒரு பிரீமியம் ரசிகர் ஈடுபாட்டு தளமாகும். இந்த புதிய செயலியின் துவக்க விழா இன்று தனியார் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் திரு புல்லேலா கோபிச்சந்த், திரு லட்சுமி நாராயணன், திரு குகேஷ் தம்மராஜு, திரு மனிகண்டன் தங்கரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு, புதிய ஆப்பை முன்னணி அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது..,
கோபிசந்த் சார் இது எனக்கு பெரிய மரியாதை, நீங்கள் எவ்வளவு பேரை முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கிறீர்கள், எத்தனை விசயங்களை செய்கிறீர்கள் என எனக்குத் தெரியும், உங்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. மணிகண்டன் சார் நீங்கள் பேசியது மிக அருமையாக இருந்தது.
நீங்கள் என்னை அண்ணா என அழைத்தார் தான் வருத்தம். எனக்கு டெக்னாலஜி பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எனக்கு லேப்டாப் தந்தால் அதில் கீபோர்டில் ஒவ்வொரு எழுத்தையும் தேடுவேன்.
நான் மொபைலில் பாஸ்வேர்ட் எல்லாம் மறந்திருக்கிறேன், ஆனால் நீங்கள் டெக்னாலஜியில் கில்லாடி. அதனால் இதை சாதித்துள்ளீர்கள். உலக சாம்பியன் குகேஷ் உங்களுடன் இணைந்து இந்த மேடையை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
Fanly என்பதை கேட்கும்போது ஃபேமிலி எனத்தான் கேட்கிறது. அவ்வளவு அழகான பெயரைத் தேடி வைத்திருப்பது அருமை. ரசிகர்களிடம் நெகட்டிவிட்டியைத் தவிர்த்து பாஸிடிவான விசயங்கள் பரப்பும் இதன் நோக்கம் அருமை. நான் எப்போதும் என் ரசிகர்களிடம் பாஸிடிவிடியை பரப்பவே நினைக்கிறேன்.
என்னை வணங்கும் ஃபேன்ஸ் வேண்டாம், என்னை ரசிக்கும் ஃபேன்ஸ் தான் வேண்டும், அதனால் தான் அவர்களை எப்போதும் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என அழைக்கிறேன்,
அதே போல் இந்த ஆப்பும் பாஸிடிவான விசயங்களை தேடி தருவது அருமை. எனக்கு எல்லா சோஷியல் மீடியாவிலும் அக்கவுண்ட் இருக்கிறது, ஆனால் அதை வேறொருவர் தான் பார்த்துக்கொள்கிறார்கள். நான் இன்ஸ்டா பக்கம் போனால், ஸ்வைப் செய்தால் ஏதாவது ரீபோஸ்ட் ஆகி பிரச்சனை ஆகிவிடுகிறது.
அதற்கு பயந்து நான் எதையும் பயன்படுத்துவதில்லை. இன்றைய கட்டத்தில் நெகட்டிவான செய்திகள் தான் அதிகம் பரவி, ஒரு மோசமான நிலைமை நிலவுகிறது.
அதை மாற்றி நல்ல விசயங்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய ஆப்பை உருவாக்கியிருக்கும் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள். எனக்கு இது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இது நடந்தால் நான் மீண்டும் சோஷியல் மீடியா பக்கம் வரலாம்.
ஒரு ரசனை சார்ந்த ஒரு கூட்டம் ஒரு விசயத்தை பேசும் கூட்டம், உதாரணமாக பேட் மிட்டன் பிடிப்பவர்கள் மட்டும் பேசிக்கொண்டால் அந்த இடமே மிக நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அதை முன்னெடுத்திருக்கும் Fanly குழுவிற்கு வாழ்த்துக்கள். அனிருத் இந்த ஆப்பில் வரவேண்டும் என நான் நினைக்கிறேன்.
அவர் இசையை ரசிப்பவர்கள், அவர் ரசிகர்கள் மட்டும் இருக்கும் குழுவில் இந்த ஆப் மூலம் அவரது இசையை பகிரும் ரசிக்கும் பெரிய தளம் கிடைக்கும். அதை அவரிடம் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். இந்த புதிய ஆப் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் நன்றி.

